Tuesday, 27 August 2013

Rajakkal Kumar



Mother Kavithai

தாயின் துடிப்பு

கவிதன், மதுரை
உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

புல்லாங்குழல்

ஆம்! என்னவளும் ஒரு புல்லாங்குழல்தான்,
அதை வாசிக்க நினைத்தவர்களின் மத்தியில்
நேசிக்க நினைத்தவன் என்பதால்தான்
என்னவோ அதன் இசை ஸ்வரங்களை
என் இரு விழி நரம்புகளிலும் சுமக்கும்
வரம் கிடைத்தது ஒரு கணம்!!!!
என் இரு விழி நரம்புகளிலும் அதன்
இசை நாளங்களை இணைத்தேன்
உயிர் கொடுத்தேன் பின் உரு கொடுத்தேன்
உணர்வில்லாது நடமாடும் உலகம்
என்னவளின் சுவாசம் மட்டும் என்னுடன்...
சத்தியமாக சொல்கிறேன்
நான் தவறவிட்ட புல்லாங்குழலல்ல அவள்..
என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட புல்லாங்குழல்..
ஏனோ! அதை வாசிக்க நினைத்தவர்கள்
உறவுகள் என்பதாலா,
இல்லை அதற்கு நான் தகுதியற்றவன்
என்பதாலா????